ஹிந்தி திரைப்பட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் உயிரிழந்ததை தாங்க முடியாமல் , அவரது ரசிகர் கோவையில் தூக்கிட்டு தற்கொலை

X

கோவை வெரைட்டிஹால் ரோடு பகுதியை சேர்ந்தவர் கணபதிதாஸ், ( 20 )கூலித் தொழிலாளி. இவர் கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்த, சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் ரசிகர். சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்ததால் கடும் விரக்தியில் காணப்பட்டார்.

இந்நிலையில் இன்று மதிய உணவுக்காக வீட்டுக்கு சென்றார். வீட்டில் உள்ள அறைக்குள் சென்ற தாளிட்டுக் கொண்டார். நீண்ட நேரம் கதவு திறக்காததால் குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, கணபதிதாஸ் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இது குறித்து வெரைட்டிஹால் ரோடு போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில், கணபதி தாஸ் எழுதிய கடிதம் ஒன்றை கண்டுபிடித்தனர். அதில் நான் சுஷாந்த் பாயிடம் செல்கிறேன் என்று ஹிந்தியில் எழுதியிருந்தது.

ஹிந்தி திரைப்பட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் உயிரிழந்த சோகம் தாங்க முடியாமல் அவரது ரசிகர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newstm.in

Next Story
Share it