1. Home
  2. தமிழ்நாடு

இங்கு தான் உணவு கொடுக்க வேண்டும்.! தன்னார்வலர்களுக்கு சென்னை மாநகராட்சி கட்டுப்பாடு..

இங்கு தான் உணவு கொடுக்க வேண்டும்.! தன்னார்வலர்களுக்கு சென்னை மாநகராட்சி கட்டுப்பாடு..


கொரோனா ஊரடங்கால் முடங்கியுள்ள மக்களுக்கு தன்னார்வலர்கள் எங்குவைத்து உணவு வழங்க வேண்டும் என சென்னை மாநகராட்சி வழிகாட்டு முறையை வெளியிட்டுள்ளது.   

சென்னை மாநகராட்சி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், சென்னை உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, மாநகராட்சியால் தடை செய்யப்பட்ட பகுதிகள், அரசு பொது மருத்துவமனைகள், மாநகராட்சி சுகாதார மையங்கள், கொரோனா தொற்று நோய் பரிசோதனை மையங்கள் மற்றும் தொற்று நோய் சிகிச்சை வழங்க அரசால் அனுமதிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகள் போன்ற பகுதிகளுக்கு அருகில் 2 கிலோ மீட்டர் சுற்றளவுக்குட்பட்ட இடங்களில் உணவு வழங்குவது முற்றிலும் தடை செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, தன்னார்வலர்கள் அதனை பின்பற்றி நடக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், தடை செய்யப்பட்ட பகுதிகளில் உணவு வழங்க வேண்டுமென்றால், மாநகராட்சியின் உணவு கிடங்குகளில் உணவு பொருட்களை வழங்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உணவு மற்றும் நிவாரண உதவிப் பொருட்கள் வழங்குவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு மாநகராட்சியின் மண்டல அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், உணவுப் பொருட்கள் ஏற்றிச் செல்லும் வாகனத்தில் மூன்று நபர்களுக்கு மேல் பயணிக்கக் கூடாது, உணவு வழங்கும்போது தனிநபர் இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகளையும் தன்னார்வலர்கள் நிச்சயம் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

newstm.in 

Trending News

Latest News

You May Like