தீ வைத்து, கல்லை தலையில் போட்டு கணவன் கொலை.. கிராமமே அதிர்ந்தது !!

 | 

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள பட்டிஹள்ளியில் நாராயணப்பா (52)- அன்னபூர்ணா (36) என்ற தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர்.

நாராயணப்பா நெலமங்களாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரீஷியனாக பணியாற்றி வந்தார். அன்னபூர்ணா வெங்காய மண்டியில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்துவேறுபாடு காரணமாக சண்டை எழுந்துவந்தது. மனைவி வேறொருவருடன் தொடர்பில் இருப்பதால் சண்டை எழுந்ததாக கூறப்படுகிறது.

kallakadhal

அன்னபூர்ணாவுக்கு பெயிண்ட் வேலை செய்து வந்த ராமகிருஷ்ணா (35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு தகாத உறவாக மாறியதாக கூறப்படுகிறது. நாராயணப்பா வேலைக்கு சென்றுவிடும் வேளையில் அன்னபூர்ணாவை சந்திக்க ராமகிருஷ்ணா அடிக்கடி சென்று வந்துள்ளார். இருவரும் அதே வீட்டில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். 

kallakadhal

இது தொடர்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமையும் அன்னபூர்ணாவிடம் நாராயணப்பா சண்டையிட்டுள்ளார். அப்போது வாக்குவாதம் முற்றவே கணவனின் தலையில் பெட்ரோலை ஊற்றி அன்னபூர்ணா தீ வைத்துள்ளார். தீ எரிய தொடங்கியதும் வீட்டை விட்டு பதறி அடித்து ஓடி வந்த நாராயணப்பா வெளியே இருந்த கழிவு நீர் கால்வாயில் விழுந்துள்ளார். அப்போது அங்கு வந்த ராமகிருஷ்ணா நாராயணப்பாவின் தலையில் கல்லை போட்டு கொலை செய்தார்.

இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இதனிடையே சம்பவம் அறிந்த போலீசார் அங்கு சென்று அன்னபூர்ணாவையும், கிருஷ்ணாவையும் கைது செய்தனர்.  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP