ஹெலிகாப்டர் விபத்து : 10 உடல்கள் அடையாளம் காணப்பட்டதாக அறிவிப்பு!!

 | 

நீலகிரி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்கள் அனைவரது உடல்களும் அடையாளம் காணப்பட்டு விட்டதாக விமானப் படை தெரிவித்துள்ளது.

விபத்தில் உயிரிழந்த 13 பேரில் முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி, பிரிகேடியர் லிட்டெர் ஆகியோரின் உடல்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டன.

இந்நிலையில், நேற்று காலையே மேலும் 6 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. சொந்த ஊர் கொண்டு செல்லப்பட்ட அவர்களின் உடல்களுக்கு ராணுவ மரியாதையுடன் இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டன.

Helicopter Crash

மீதமுள்ள 4 பேரின் உடல்கள் கருகிய நிலையில் இருந்ததால், அடையாளம் காண்பதில் தாமதம் ஏற்பட்டது. விபத்தில் உயிரிழந்த ஹரிந்தர் சிங், ஹவில்தர் சத்பால், குர்சேவக் சிங், ஜிதேந்தர் குமார் ஆகியோரின் உடல்கள் நேற்றிரவு அடையாளம் காணப்பட்டு விட்டதாக விமானப் படை தெரிவித்துள்ளது.

அவர்களது உடல்கள் டெல்லி கண்டோன்ட்மென்ட் மருத்துவமனை பிணவறையில் இருந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP