நேற்று ஒரே நாளில் 50 செ.மீ., அதி கனமழை பதிவு... எங்கு தெரியுமா ?
வங்கக்கடலில் உருவாகியிருந்த பெஞ்சல் புயல் நேற்று நள்ளிரவு புதுச்சேரி அருகே கரையை கடந்தது. புயலின் தாக்கத்தால் சென்னை, புதுச்சேரி, விழுப்புரம், கடலூர், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது.
விழுப்புரம் மாவட்த்திலும் விக்கிரவாண்டி, திண்டிவனம், வானூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இந்நிலையில் மிக அதிக மழை அளவாக 50 செ.மீ மயிலத்தில் பதிவாகி உள்ளது
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் மீண்டும் பெய்யத் தொடங்கிய கனமழை. சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்துள்ளனர்.
#WATCH | விழுப்புரம் மாவட்டத்தில் மீண்டும் பெய்யத் தொடங்கிய கனமழை
— Sun News (@sunnewstamil) December 1, 2024
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்துள்ளனர்.#SunNews | #FengalCyclone | #Villupuram pic.twitter.com/hvbxL7xLmL