தமிழகத்தில் இந்த 6 மாவட்டங்களில் கனமழை பெய்யுமாம் !!

தமிழகத்தில் இந்த 6 மாவட்டங்களில் கனமழை பெய்யுமாம் !!

தமிழகத்தில் இந்த 6 மாவட்டங்களில் கனமழை பெய்யுமாம் !!
X

இது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள சென்னை வானிலை ஆய்வு மையம் ; வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு வட கடலோர மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, புதுவை காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

அதே போல சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொருத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல், அந்தமான், தென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல், கேரளா, கர்நாடகா மற்றும் லட்சத்தீவு, தென்மேற்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில்மணிக்கு 40 - 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் இன்று செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Newstm.in

Next Story
Share it