தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை !! வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை !! வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை !! வானிலை ஆய்வு மையம்
X

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- வளிமண்டல சுழற்சியின் காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது.

குறிப்பாக, கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி உள்பட 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும். அதேபோல, விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும்.தென்கிழக்கு அரபிக்கடல், கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய கடல்பகுதிகளில் பலத்த காற்று வீசூம் என்பதால் நாளை மீனவர்கள் செல்ல வேண்டாம். அதேபோல, தென்மேற்கு அரபிக்கடல், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு 26ம் தேதி வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newstm.in

Next Story
Share it