"ரூ.250 கோடி பட்ஜெட் படத்திற்கு இவர் தான் இசை அமைக்க வேண்டும்" : பிரபாஸ் பிடிவாதம்!

"ரூ.250 கோடி பட்ஜெட் படத்திற்கு இவர் தான் இசை அமைக்க வேண்டும்" : பிரபாஸ் பிடிவாதம்!

ரூ.250 கோடி பட்ஜெட் படத்திற்கு இவர் தான் இசை அமைக்க வேண்டும் : பிரபாஸ் பிடிவாதம்!
X

பாகுபலிக்கு பிறகு பிரபாஸின் மார்க்கெட் வேற லெவலுக்கு சென்றுவிட்டது. இவர் பூஜா ஹெக்டே உடன் சேர்ந்து ராதே ஷ்யாம் என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்தப்படம் முழுக்க முழுக்க காதல் கதையாக உருவாக உள்ளது. 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் இந்த படம் உருவாக உள்ளது. சாஹோ படத்தை தயாரித்த யூவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தான் ராதே ஷ்யாம் படத்தை தயாரிக்க உள்ளது. சமீபத்தில் வெளியான இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இசையமைப்பாளர் பெயர் இடம்பெறவில்லை.

அதற்கு காரணம் ஏ.ஆர்.ரஹ்மான் தான் படத்திற்கு இசை அமைக்க வேண்டுமென பிரபாஸ் உறுதியாக இருக்கிறாராம். வேறு யார் இசை அமைத்தாலும் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டாராம். அதே நேரத்தில் ரஹ்மான் மிகவும் பிஸியாக இருப்பதால், பேச்சுவார்த்தை நீடிக்கிறது. 

newstm.in

Next Story
Share it