1. Home
  2. தமிழ்நாடு

நாடோடிகள் புகழ் நடிகை அபிநயாவின் வருங்கால கணவர் இவர்தான்..!

Q

2009 ஆண்டு ரிலீஸான நாடோடிகள் திரைப்படத்தில் ஹீரோவுக்கு தங்கையாக நடித்து அறிமுகமானவர் நடிகை அபிநயா.

இந்த படத்திற்கு பிறகு தொடர்ந்து ஈசன், ஏழாம் அறிவு, வீரம் உள்ளிட்ட சில தமிழ் திரைப்படங்களில் நடித்து வந்தார். மலையாளத்திலும் இவர் நடிப்பில் பல நல்ல படங்கள் வெளியாகி உள்ளன. இவரிடம் பலர் ரசிக்கும் ஒரு விஷயமே, அபிநயாவிற்கு இருக்கும் மேற்கண்ட குறைபாடு எதுவுமே அவர் நடிக்கும் பாேது தெரியாது. அந்த அளவிற்கு, தன் குறையை பற்றி மட்டும் பேசுபவர்களை தனது திறமையால் வாய் மூட செய்பவர் இவர்.

அபிநயா, சமீபத்தில் கூட தமிழில் மார்க் ஆண்டனி படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரமாக வந்திருந்தார். தான் நடிக்கும் திரைப்படங்களின் ப்ரமோஷன்களுக்கு இவரே சென்று நேரில் பேட்டி கொடுப்பார். இவரது சைகை மொழியை விளக்குவதற்கு மட்டும் ஒருவர் கூடவே இருப்பார்.

சில மாதங்களுக்கு முன்பு ஒரு நேர்காணலில் தான் ஒருவரை காதலிப்பதாகவும், அவரை விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறினார். அவர் யார் என்பதை இப்போது சொல்ல முடியாது என்றும் கூறினார். இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அதில், ஒருவருடன் சேர்ந்து கோயில் மணியை அடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது. ஆனால், தன்னை திருமணம் செய்து கொள்ள போகிறவரின் புகைப்படத்தை அவர் வெளியிடவில்லை

அபிநயா, ஒரு வழியாக தான் திருமணம் செய்து கொள்ள இருக்கும் நபரின் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். அவரது பெயர் வேகசேனா கார்த்திக். கடந்த மார்ச் 9ஆம் தேதி நிச்சயம் முடிந்ததாகவும் அபிநயா அந்த போஸ்டில் குறிப்பிட்டுள்ளார்.

Q

Trending News

Latest News

You May Like