அஜித் ரசிகர்களுக்கு செம ஸ்வீட்டான அப்டேட்..!
விடாமுயற்சி படத்தின் வெளிநாட்டு ப்ரீ புக்கிங் துவங்கியது. இந்த நிலையில், ப்ரீ புக்கிங்கில் இதுவரை இப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, யூகே மற்றும் அயர்லாந்தில் ப்ரீ புக்கிங் ஆரம்பமான நிலையில், இதுவரை ரூ. 8.5 லட்சம் வரை வசூல் வந்துள்ளது. துணிவு படத்தை விட, விடாமுயற்சி படத்திற்கு ப்ரீ புக்கிங் சிறப்பான ஒப்பனிங் கொடுத்துள்ளது என தகவல் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் அஜித் ரசிகர்களுக்கு செம ஸ்வீட்டான அப்டேட்டினை படக்குழு கொடுத்துள்ளது. அதாவது விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு முடிந்தது என அதிகாரப்பூர்வமாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு செம குஷியான, அப்டேட்டாக உள்ளது. இந்தத் தகவல் தற்போது அஜித் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றது.
இது தொடர்பாக படக்குழு தெரிவித்துள்ள, அறிவிப்பில், " விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு இன்று அதாவது டிசம்பர் 22ஆம் தேதி சிறப்பாக நடந்து முடிந்துவிட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். படம் 2025ஆம் ஆண்டு பொங்கலுக்கு திரையரங்கில் ரிலீஸ் ஆகும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனி, அஜித் குமாருக்கு எழுதியுள்ள, நன்றி மடலில், " சார், உங்கள் மீது அளவற்ற அன்பும், பெரும் மரியாதையும் உள்ளது. நீங்கள் எங்களின் வழிகாட்டியாக இருந்துள்ளீர்கள். நீங்கள் மிகவும் சாதரணமாக இருந்தே எங்களுக்கு உத்வேகமும் ஊக்கமும் கொடுத்துள்ளீர்கள். அதனை ஒட்டுமொத்த விடாமுயற்சி படக்குழுவுக்கும் அளித்துள்ளீர்கள்.
மேலும், தனிப்பட்ட முறையில், உங்கள் அன்புக்கும் அக்கறைக்கும் சப்போர்ட்டுக்கும் நன்றிகள். இதனை எனக்கு நிங்கள் முதல் நாளில் இருந்து இந்த கடைசி நாள் வரை கொடுத்துள்ளீர்கள். இதனாலே உங்கள் மீது மதிப்பும் மரியாதையும் அதிகமாகியுள்ளது சார்" எனத் தெரிவித்துள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.