செம்ம ஹேப்பி நியூஸ் !! கொரோனாவுக்கு மருந்து திருநெல்வேலியில் ரெடி: எடப்பாடியார் நினைச்சா உலகையே காப்பாத்தலாம்.

செம்ம ஹேப்பி நியூஸ் !! கொரோனாவுக்கு மருந்து திருநெல்வேலியில் ரெடி: எடப்பாடியார் நினைச்சா உலகையே காப்பாத்தலாம்.

செம்ம ஹேப்பி நியூஸ் !! கொரோனாவுக்கு மருந்து திருநெல்வேலியில் ரெடி: எடப்பாடியார் நினைச்சா உலகையே காப்பாத்தலாம்.
X

கோயமுத்தூர் சிட்டியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். தமிழகத்தின் பாரம்பரிய மருத்துவ முறை பற்றி படித்து கொண்டிருக்கிறார். தனது நண்பர்கள் வட்டாரத்தில் ஏதாவது உடல் நல குறைபாடு என்றால் , மிக எளிதாக வீட்டு வைத்திய குறிப்புகள் சிலவற்றை சொல்லி, வெகு விரைவில் அவர்களை பிரச்சனைகளிலிருந்து விடுவிப்பது இவரது வழக்கம். இந்தியாவில் கொரோனா பரவ ஆரம்பித்ததும் , பிரதமர் மற்றும் தமிழக முதல்வர் உள்ளிட்டோருக்கு ஒரு வீடியோ மெசேஜ் அனுப்பினார்.

அதில் நம் நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறைகளில் இதற்கான தீர்வு உள்ளது, அவற்றை கொஞ்சம் கவனியுங்கள்.கையோடு அந்த வீடியோவை பிரதமர் மற்றும் முதல்வரின் பார்வைக்கும் அனுப்பினார். இந்நிலையில், பிரதமரும் தேசத்தின் பாரம்பரிய முறை மருத்துவர்களோடு காணொலியில் ஆலோசனை நடத்தினார். இதில் தமிழகத்தை சேர்ந்த வல்லுநர்களும் கலந்து கொண்டனர். இந்த சூழலில், கோவை கோபாலகிருஷ்ணன் மீண்டும் ஒரு பதிவை போட்டுள்ளார்,

அதில் கொரோனாவுக்கு மருந்து தமிழகத்திலேயே உள்ளது. என்று கூறியிருக்கிறார். அவரது வீடியோவில் குறிப்பிட்டுள்ளது என்னவென்றால் , கொரோனா சிக்கலுக்கு நம் பாரம்பரிய வைத்திய முறையில் தீர்வு இருக்கும்போது, தீர்வை தராத ஆங்கில மருத்துவத்தை நாம் அடம் செய்து, பிடித்துக் கொண்டே இருக்க வேண்டியது ஏன் ? நம் சித்தர்கள் இந்த மண்ணைக் காப்பாற்றத்தான் பல முறைகளை எழுதிட்டுப் போயிருக்காங்க.

இத்தனை வகையான சுரம், இதுக்கு இன்னென்ன மருந்துகள்னு சொல்லியிருக்காங்க. சித்த வைத்தியம், ஆயுர்வேதம், யுனானி மருத்துவ முறைகள் இருக்குது, இவங்களிடம் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சொல்லி நீங்கள் ஏன் முயற்சிக்க கூடாது ? சித்த மருத்துவ கல்லூரிகளில் கொரோனா நோயாளிகளை அட்மிட் செய்து, அங்கிருக்கும் சித்த வைத்திய டாக்டர்கள் வாயிலாக சிகிச்சை வழங்கலாமே?

ஏற்கனவே சித்த வைத்திய குழு ஆடாதொடா குடிநீர், கபசுர குடிநீர் மற்றும் தடுப்பு மருந்தாக நிலவேம்பு குடிநீரை பரிந்துரை செய்திருக்குதே. இந்த வைத்தியத்தில் மிக முக்கியமானதான ஆடாதொடாவை எளிமையாக நம்ம மாவட்டத்திலேயே எடுத்துக்கலாம். தென்காசி, குற்றாலம் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் தாமிரபரணி ஆற்றங்கரையிலேயே ஆடாதோடா நிறைய இடங்களில் இருக்குது.

அதை எடுத்தால் உலக மக்களையே காப்பாற்ற முடியும். கபசுரக்குடிநீரில் பல பார்மூலா சொல்லியிருக்காங்க. அதாவது முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய பகுதிகளில் எந்த இடத்தில் என்ன கிடைக்குதோ, அதை வைத்தே எப்படி குணப்படுத்தலாம்னு சித்தர்கள் சொல்லியிருக்காங்க. அதனால் நம் சித்தர் வழி நடந்து, நம் மக்களை மட்டுமில்லாது, உலக மக்களையே குணப்படுத்துவோம். கொரோனாவை ஒழித்தது ஒரு தமிழர், தமிழக முதல்வர் என்கிற உலக பெருமை உங்களுக்கு வரட்டும். ஆலோசனை பண்ணுங்க ப்ளீஸ் என்று அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது.

Newstm.in

Next Story
Share it