மகிழ்ச்சியான செய்தி! 19 முறை கொரோனா பாசிட்டிவ்... 20ஆவது முறை நெகட்டிவ்!

மகிழ்ச்சியான செய்தி! 19 முறை கொரோனா பாசிட்டிவ்... 20ஆவது முறை நெகட்டிவ்!

மகிழ்ச்சியான செய்தி! 19 முறை கொரோனா பாசிட்டிவ்... 20ஆவது முறை நெகட்டிவ்!
X

கேரளாவில்  தொடர்ந்து 19 முறை கொரோனா உறுதிப்படுத்த ப்பட்ட 62 வயது மூதாட்டிக்கு இருபதாவது சோதனையில் கொரோனா நெகடிவ் என முடிவு கிடைத்துள்ளது. இதையடுத்து 45 நாள் சிகிச்சை முடிந்து அவர் வீடு திரும்ப உள்ளார். 

பத்தனம்திட்டாவை சேர்ந்த 62 வயது மூதாட்டி கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் 10 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு அவ்வப்போது பரிசோதனைகளும் நடத்தப்பட்டன. 19 சோதனைகளிலும்  அவருக்கு பாசிடிவ் என்றே முடிவுகள் கிடைத்தது.  இது மருத்துவ சமூகத்தினரிடையே குழப்பத்தையும் கவலையையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் மூதாட்டிக்கு 20 மற்றும் 21வது முறை நடத்தப்பட்ட சோதனைகளில் இரு முறையும் நெகடிவ் என வந்துள்ளதாகவும் எனவே அவர் வீட்டுக்கு அனுப்பப்பட உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

newstm.in

Next Story
Share it