‘புனித ஹஜ் பயணம்’ கடந்த வருடத்தை விட 658 பேருக்கு குறைவாகவே அனுமதி!! எடப்பாடி மோடியிடம் கோரிக்கை!!

தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்குக் கூடுதல் இடங்களை ஒதுக்க வேண்டும் என, பிரதமர் மோடியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.இந்த ஆண்டு ஹஜ் பயணம் செய்வதற்கு 6028 பேரின் விண்ணப்பங்களை தமிழ்நாடு ஹஜ் கமிட்டி பெற்றுள்ளது. இதில் 7 குழந்தைகளும் அடங்குவர். ஆனால் தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ள 3,736 இடங்கள் தான் இந்திய ஹஜ் கமிட்டி ஒதுக்கீடு செய்துள்ளது.

‘புனித ஹஜ் பயணம்’ கடந்த வருடத்தை விட 658 பேருக்கு குறைவாகவே அனுமதி!! எடப்பாடி மோடியிடம் கோரிக்கை!!
X

ஹஜ் பயணத்திற்காக கொடுக்கப்பட்டிருக்கும் பட்டியலில் உள்ள அனைவரையும், ஹஜ் பயணம் செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியை வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கு இந்த வருடம், 3,736 பேருக்கு தான் அனுமதியளிப்பதாக இந்திய ஹஜ் கமிட்டி ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்த ஆண்டு 4 ஆயிரத்து 394 பேர் தமிழகத்தில் இருந்து புனித ஹஜ் பயணம் மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

செளதி அரேபியாவில் உள்ள மெக்கா நகருக்கு துல்ஹஜ் மாதத்தில் புனித யாத்திரை மேற்கொள்வதே ஹஜ். புனிதப் பயணம் மேற்கொள்வது இசுலாமியரது ஐந்து கடமைகளில் ஒன்றாகும். நபிகள் நாயகம் பிறந்த புனித மண்ணை வணங்கி வரவேண்டும் என்பது ஒவ்வொரு இஸ்லாமியர் ரத்தத்தில் கலந்து போன ஒன்று. அந்த வாய்ப்பிற்காக வாழ்நாள் முழுவதும் காத்திருப்பார்கள். இது அனைவரும் கட்டாயமாக நிறைவேற்ற வேண்டிய கடமை என்று சொல்லப்படாவிட்டாலும், ஹஜ் கடமையை நிறைவேற்றும் உடல் மற்றும் பொருளாதாரத் தகுதி கொண்டவர்களுக்கு, இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.வாழ்வில் ஒரு முறையாவது அவர்கள் ஹஜ் புனிதப் பயணம் செல்ல வேண்டும்.

வசதியும், உடல் தகுதியும் இருந்தும், இந்தக் கடமையை நிறைவேற்றவில்லை எனில் அவர் குற்றவாளி ஆவர். ஆனால், அனைவர்க்கும் இந்த வாய்ப்பு கிடைப்பதில்லை ஏனென்றால் குறிப்பிட்ட அளவில் தான் ஹஜ் பயணிகள் ஆண்டு தோறும் அனுமதிக்கப்படுகிறார்கள்

‘புனித ஹஜ் பயணம்’ கடந்த வருடத்தை விட 658 பேருக்கு குறைவாகவே அனுமதி!! எடப்பாடி மோடியிடம் கோரிக்கை!!

அதன்படி இந்த ஆண்டு ஹஜ் பயணம் செய்வதற்கு 6028 பேரின் விண்ணப்பங்களை தமிழ்நாடு ஹஜ் கமிட்டி பெற்றுள்ளது. இதில் 7 குழந்தைகளும் அடங்குவர். ஆனால் தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ள 3,736 இடங்கள் தான் இந்திய ஹஜ் கமிட்டி ஒதுக்கீடு செய்துள்ளது.

அதனால், ஹஜ் கமிட்டி பரிந்துரைத்த 6,028 பேரின் விண்ணப்பங்களையும் ஏற்க வேண்டும். மற்ற மாநிலங்களில் ரத்து செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் பயன்படுத்தப்படாமல் உள்ள இடங்களை தமிழகத்திற்கு ஒதுக்கித் தர வேண்டும்" என கடிதத்தில் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

newstm.in

Tags:
Next Story
Share it