தாத்தா பிச்சையெடுத்ததைப் பாரு... தயாநிதி மாறனை பங்கம் பண்ணிய ஹெச்.ராஜா!

தாத்தா பிச்சையெடுத்ததைப் பாரு... தயாநிதி மாறனை பங்கம் பண்ணிய ஹெச்.ராஜா!

தாத்தா பிச்சையெடுத்ததைப் பாரு... தயாநிதி மாறனை பங்கம் பண்ணிய ஹெச்.ராஜா!
X

பிரதமர் மோடியையும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் பிச்சைக்காரர்கள் என கூறிய திமுக எம்.பி. தயாநிதி மாறனுக்கு பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா ஒரு புகைப்படம் மூலம் நச்சென்று பதில் அளித்துள்ளார். 

கொரோனா நேரத்தில் மற்ற நாடுகள் மக்களுக்கு உதவி செய்து வரும் நிலையில், பிரதமரும், முதலமைச்சரும் பாத்திரம் ஏந்தி பிச்சை எடுத்து வருகின்றார்கள் என்றும், ஏற்கனவே பிச்சை எடுத்து வரும் மக்களிடம் மத்திய, மாநில அரசுகள் பிச்சை எடுக்கிறது என்று தயாநிதி மாறன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது பேச்சுக்கு பல தரப்பினர் கடுமையாக எதிர்வினையாற்றி வருகின்றனர். இந்து அமைப்புகளின் சார்பில் கோவையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு முடிவுக்கு பிறகு வழக்குப்பதிவு செய்யப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில் பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் கருணாநிதி உண்டியல் வசூல் செய்யும் பழைய புகைப்படத்தை பதிவிட்டு, தயாநிதியின் தாத்தா பிச்சை எடுத்தபோது என கருத்து தெரிவித்து பகிர்ந்துள்ளார். இந்தப்பதிவுக்கும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. 

newstm.in

Next Story
Share it