20 பேர் முன்னிலையில் எளிமையாக நடைபெற்ற கும்கி நடிகரின் திருமணம்!

20 பேர் முன்னிலையில் எளிமையாக நடைபெற்ற கும்கி நடிகரின் திருமணம்!

20 பேர் முன்னிலையில் எளிமையாக நடைபெற்ற கும்கி நடிகரின் திருமணம்!
X

'கும்கி', 'பாஸ் (எ) பாஸ்கரன்' போன்ற பல படங்களில் நடித்துள்ள நகைச்சுவை நடிகர் அஸ்வின் ராஜாவின் திருமணம் சென்னையில் எளிமையாக நடைபெற்றது. இவர் வித்யாஸ்ரீ என்ற பெண்ணை மணந்துள்ளார்.

கொரோனா நோய்ப் பரவல் மிகத் தீவிரமாக இருந்து வரும் இந்த வேளையில் இவரது திருமணம் நடைபெற்றுள்ளது. மண நிகழ்ச்சிகள் உட்பட பலவற்றுக்கும் கட்டுப்பாடுகள் உள்ளதால் மிக நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர். மணமகன் அஸ்வின் மற்றும் வித்யாஸ்ரீ ஆகியோர் கடந்த 4 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் நன்கு அறிமுகி பழகிவந்துள்ளனர். அதன்பிறகு இவரது பெற்றோர் இறுதியாக ஒப்புக் கொண்டதால் இந்தத் திருமணத்தை ஏற்பாடு செய்துள்ளனர். ராஜசேகரின் மகள் வித்யாஸ்ரீ சென்னை கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர். அவர் அமெரிக்காவில் முதுகலைப் படிப்பை முடித்திருந்தார். 


பிரபலமான தயாரிப்பு நிறுவனமான லட்சுமி மூவி மேக்கரின் தயாரிப்பாளர் சுவாமிநாதனின் மகன்தான் இந்த அஸ்வின் ராஜா. இளம் நடிகரான இவர் கடந்த ஆண்டு வெளியான ஜோதிகாவின் 'ஜாக்பாட்' மற்றும் ஹரிஷ் கல்யாண் நடித்த 'தனுசு ராசி நேயர்களே' படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Next Story
Share it