பெரும் சோகம்: பணி முடிந்து வீடு திரும்பிய காவலருக்கு நடந்த துயரம் !

 | 

பேரிடர் மேலாண்மை குழுவில் பணி முடித்து வீடு திரும்பிய காவலர் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

சிவகங்கை மாவட்டம் இளமனூரைச் சேர்ந்த சுரேஷ், சாலைக்கிராம காவல் நிலையத்தில் இரண்டாம்நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு வயது மற்றும் நான்கு வயதில் 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

சிவகங்கையில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் பேரிடர் மேலாண்மை குழுவில் மீட்பு பணியில் இருந்து வந்தார். வழக்கம்போல் தனது பணியை முடித்துவிட்டு, தனது பைக்கில் வீடு திரும்பினார். இளையான்குடி அருகே உள்ள திருவேங்கடம் அருகே சுரேஷ் வந்துகொண்டிருந்தபோது, எதிரே பரமக்குடியில் இருந்து திருச்சி நோக்கி வந்த அரசுப் பேருந்து அவரது பைக் மோதியது. இதில் காவலர் சுரேஷ் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.
 accident police
அவரது உடலை கைப்பற்றிய இளையாங்குடி காவல்துறையினர் உடல்கூறு ஆய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP