1. Home
  2. தமிழ்நாடு

பிரமாண்ட சென்னை புத்தகக் காட்சி இன்று தொடக்கம்!



44ஆவது சென்னை புத்தகக் காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

காலை 9 மணிக்கு துணை முதல்வா் .பன்னீா்செல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புத்தகக் காட்சியைத் தொடங்கி வைக்கிறார். புத்தகக் காட்சியில் 700க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

காலை 11 முதல் மாலை 8 மணி வரை வாசகா்கள் அனுமதிக்கப்படுவார்கள். நுழைவுக் கட்டணம் ரூ.10. இணையவழியிலும் நுழைவுச்சீட்டு பெறலாம். பள்ளி மாணவா்களுக்கு கட்டணம் இல்லை.

புத்தக காட்சியில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு ஓவியம், பேச்சு, விநாடி-வினா போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட இருக்கிறது. வாசிப்பை வளா்க்கும் விதமாக குழந்தைகள் கதை சொல்லும் நிகழ்ச்சிகளும் நடைபெற இருக்கின்றன.

நடப்பாண்டுரேக்என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சிறிய எழுத்தாளா்கள் மற்றும் பதிப்பாளா்கள் தங்கள் நூல்களை காட்சிப்படுத்தலாம். இன்று தொடங்கும் புத்தக காட்சி மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த புத்தக காட்சியிவ் சிறப்பு என்னவென்றால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகா் கமல்ஹாசன் பரிந்துரைத்த புத்தகங்கள் தனி அரங்கில் காட்சிக்கு வைக்கப்படும்.

மேலும், புத்தகக் காட்சியின்போது ட்விட்டா் வழியாக சிறந்த புத்தகங்களைப் பரிந்துரை செய்யவும் கமல்ஹாசன் ஒப்புக்கொண்டுள்ளார்.

newstm.in

Trending News

Latest News

You May Like