தாத்தாவின் சில்மிசம் !! 16 வயது சிறுமிக்கு , லவ் லட்டர் கொடுத்த 66 வயது தாத்தா...

தாத்தாவின் சில்மிசம் !! 16 வயது சிறுமிக்கு , லவ் லட்டர் கொடுத்த 66 வயது தாத்தா...

தாத்தாவின் சில்மிசம் !! 16 வயது சிறுமிக்கு , லவ் லட்டர் கொடுத்த 66 வயது தாத்தா...
X

கோவை அடுத்த போத்தனூர் அருகே பஜன கோயில் தெருவில் வசிப்பவன் முகமது பீர் பாஷா (66). இதே பகுதியில் வசித்து வரும் 16 வயது சிறுமியை தவறான கண்ணோட்டத்தில் பார்த்து வந்துள்ளார்.

உடனே அந்த சிறுமியிடம் எனக்கு உன்னை பிடித்திருக்கிறது உனக்கு ஓகே வா என்று கேட்டு கடிதம் ஒன்றை கொடுத்துள்ளான். இதனை அச்சிறுமி அவரின் தாயாரிடம் கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து சம்பந்தபட்ட நபரின் குடும்பத்தாரிடம் அச்சிறுமியின் வீட்டார் தெரிவித்த போது அந்த முதியவரை கண்டித்துள்ளனர்.

ஆனால் அதனை பொருட்படுத்தாத வயதானவன் மீண்டும் அந்த சிறுமியை மிரட்டி உள்ளான். இதனைத்தொடர்ந்து பயந்த சிறுமி வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்துள்ளார். இது தொடர்பாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர் தரப்பில் புகார் கொடுக்கப்பட்டது.

புகாரை விசாரித்த அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் முதியவனை கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறுமி தவறான கண்ணோட்டத்தில் பார்த்து காதல் கடிதம் கொடுத்த முதியவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 

Newstm.in

Next Story
Share it