தாத்தாக்கள் அட்டகாசம்.. குமரியின் சிறுமிக்கு நீதி கேட்டு வைரலாகும் #justice_for_daughter !

தாத்தாக்கள் அட்டகாசம்.. குமரியின் சிறுமிக்கு நீதி கேட்டு வைரலாகும் #justice_for_daughter !

தாத்தாக்கள் அட்டகாசம்.. குமரியின் சிறுமிக்கு நீதி கேட்டு வைரலாகும் #justice_for_daughter !
X

கன்னியாகுமரியில் 8 வயது சிறுமிக்கு 4 தாத்தாக்கள் உட்பட 8 பேர் சேர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சுமார் 80 பெண்களை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்து வீடியோவை காட்டி மிரட்டிய பணம் பறித்த காசி சம்பவம் அடங்குவதற்குள் இந்த நிகழ்வு அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கன்னியாகுமரி 8 வயது சிறுமிக்கு நீதி கேட்டு #justice_for_daughter என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.   

தேங்காய் பட்டணத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளியின் 8 வயது மகள் குடும்ப வறுமை காரணமாக தெருவில் உள்ளவர்களிடம் உதவி கேட்டுள்ளார். அதாவது ஊரடங்கு காரணமாக அவரது தந்தைக்கு வேலை இல்லை, தாய் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் சிறுமிக்கு இப்படியோரு பரிதாப நிலை. 

இந்த வறுமையை பயன்படுத்திக்கொண்டு சிறுமிக்கு உதவி செய்வதாக அழைத்துச் சென்று சிலர் பாலியல் தொல்லை அளித்துள்ளனர். 
  
சிறுமிக்கு பண உதவியையும் செய்துவிட்டு, பாலியல் தொல்லையையும் தந்து வந்திருக்கிறார்கள். இது தொடர்பான புகார் அடிப்படையில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்த 8 பேரில் 4 பேர் தாத்தாக்கள். 75 வயதான முகமது நூகு, 52 வயதான சகாயதாசன் , 53 வயதான ஜாகீர் உசேன், 66 வயதான அப்துல் ஜாபர் ஆகியோர் அடங்குவர்.

இதில் மற்றொரு கொடுமையும் உள்ளது. 8 பேரில் 2 பேர் 15 வயது சிறுவர்களாம். 8 பேரையும் கைது செய்த போலீசார் 2 சிறுவர்களை போக்சோவில் வழக்கு பதிவு செய்தனர்.

அவர்கள் கைது செய்யப்பட்டாலும், #justice_for_daughter என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. இந்த கயவர்களுக்கு உரிய தண்டனை தர வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் பல்வேறு கருத்துக்கள் பதிவாகி வருகின்றனர். 

newstm.in 

Next Story
Share it