1. Home
  2. தமிழ்நாடு

' மது பாபு பென்ஷன் யோஜனா ' திட்டத்தின் கீழ் திருநங்கைகளுக்கு ஓய்வூதியம் வழங்க அரசு முடிவு...

' மது பாபு பென்ஷன் யோஜனா ' திட்டத்தின் கீழ் திருநங்கைகளுக்கு ஓய்வூதியம் வழங்க அரசு முடிவு...


சமூக நலத்திட்டத்தின் கீழ் மாநில அரசால் வழங்கப்படும் 'மது பாபு பென்ஷன் யோஜனா' ஓய்வூதிய திட்டத்தில் திருநங்கைகளையும் சேர்பதாக ஒடிசா அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் விதவைகள் , மாற்றுத்திறனாளிகள் ஆகியோரும் பயனடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் இதில் மூன்றாம் பாலினத்தவர்களை சேர்க்க முதல்வர் நவீன் பட்நாயக் ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் அவர்களின் வயதுக்கேற்ப ரூ.500 முதல் ரூ.900 வரை ஓய்வூதியம் கிடைக்கும் என்று மாநில அமைச்சர் அசோக் பாண்டா தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின் கீழ் 6000 திருநங்கைகள் பயன்பெருவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளாது. இதற்கு தேவையான நிதியுதவி ஏற்கெனவே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், பயனர்களுக்கு விரைவில் பணம் கிடைக்கும் என்றும் ஒடிசா அரசு தெரிவித்துள்ளது. மேலும் ஓய்வூதியத்தை பெற விரும்பும் திருநங்கைகள் MBPY அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newstm.in

Trending News

Latest News

You May Like