15 நாட்களில் மாபெரும் மருத்துவமனைகளை உருவாக்க திட்டம் - அரசின் மாஸ்டர் பிளான்!

 | 

1000 படுக்கைகளுடன் இந்தியாவின் மிகப் பெரிய கொரோனா சிகிச்சை மருத்துவமனைகளை 15 நாட்களில் உருவாக்க ஒடிஷா அரசு திட்டமிட்டுள்ளது. 

கொரோனாவின் தாக்கம் உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சீனாவில் கொரோனா தாக்குதல் தொடங்கிய போது உடனடியாக பிரமாண்ட மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதே பாணியில் இப்போது ஒடிஷா அரசும் களம் இறங்கியுள்ளது.


1,000 படுக்கைகளுடனான மருத்துவமனைகளை 15 நாட்களில் உருவாக்க அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நேற்று கையெழுத்தாகின. 450 படுக்கைகளுடன் ஒரு மருத்துவமனையும் 550 படுக்கைகளுடன் மற்றொரு மருத்துவமனையும் உருவாக்கப்பட உள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP