1. Home
  2. தமிழ்நாடு

Zomato, Dunzo நிறுவனங்கள் மூலம் அரசு புதிய ஏற்பாடு !!

Zomato, Dunzo நிறுவனங்கள் மூலம் அரசு புதிய ஏற்பாடு !!


கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று மாநகராட்சிகளில் ஏப்ரல் 26 முதல் 29 வரை நான்கு நாள்களுக்கும் சேலம், திருப்பூர் மாநகராட்சிப் பகுதிகளில் ஏப்ரல் 26 முதல் 28 வரை மூன்று நாள்களுக்கும் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஆவின் பால், பால் பொருட்களை நுகர்வோரின் வீடு தேடி சென்று வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 24ம் தேதி முதல் Zomato, Dunzo நிறுவனங்கள் மூலம் சேவையாற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது.

தேவையான இடங்களில் தற்காலிக கடைகள் அமைக்கவும் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஆவின் முகவர் நியமனத்திற்கான வைப்புத்தொகை ரூ.1000 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த வாய்ப்பினை பயன்படுத்தி வணிக நிறுவனங்கள் தங்களது விற்பனையை அதிகரித்து கொள்ள ஆவின் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. பொதுமக்கள் தங்களின் அத்தியாவசிய தேவையான மளிகை பொருட்கள் கொள்முதல் செய்யும் கடைகள், சூப்பர் மார்கெட்டுகள் ஆகிய இடங்களில் ஆவின் கிடைக்க வழி வகுக்கப்பட்டுள்ளது.

Zomato, Dunzo நிறுவனங்கள் மூலம் அரசு புதிய ஏற்பாடு !!

மேலும் தொடர் நடவடிக்கையின் மூலம் தமிழகம் முழுவதும் ஆவின் பால் விற்பனை 22.50 லட்சத்தில் இருந்து 24.50 லட்சமாக அதிகரித்துள்ளது. பால் கொள்முதல் செய்யும் உரிமையாளர்களிடம் துவங்கி, வீடுகளுக்கு பால் சென்றடையும் வரை கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் கவனமுடன் பின்பற்றப்படுகின்றன.

பணிக்கு வரும் ஆட்கள் தினந்தோறும் உரிய பரிசோதனைக்கு பின்பே அனுமதிக்கப்படுகின்றனர். பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப தடையின்றி பால் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

Newstm.in

Trending News

Latest News

You May Like