1. Home
  2. தமிழ்நாடு

கொரோனாவை கட்டுப்படுத்த அரசு புதிய உத்தி! வருகிறது ஆதார் ஃபார்முலா!!

கொரோனாவை கட்டுப்படுத்த அரசு புதிய உத்தி! வருகிறது ஆதார் ஃபார்முலா!!


கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஆதாருக்கு பயன்படுத்தப்பட்ட முகத்தை ஸ்கேன் செய்து அடையாளம் காணும் தொழில்நுட்பத்தை பயன்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு கைரேகை பதிவு மற்றும் கருவிழி ஸ்கேன் தேவைப்படுகிறது. அவ்வாறு கைகளை ஸ்கேன் செய்யும்போது நோய் பரவ வாய்ப்பிருப்பதால், மாற்று திட்டத்தை முன்னெடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி தடுப்பூசிக்காக கருவிழி மற்றும் கைரேகை பதிவு செய்வதை தவிர்த்து, ஆதாருக்கு முகத்தை ஸ்கேன் செய்த அதே நடைமுறையை பின்பற்ற உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், தொடர்பு இல்லாமல் தடுப்பூசி செலுத்துவதில் இந்தியா முக்கிய இடத்தை பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. புதிய திட்டத்தின்படி, தடுப்பூசி போட்டுக் கொள்ள விரும்புவோர் ஆரோக்கிய சேது செயலியில் உள்ள கோவின் (Co-WIN) தளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

செல்போன் எண் மற்றும் ஆதார் எண்ணை அந்த செயலியில் பதிவு செய்ய வேண்டும். தடுப்பூசி மையத்துக்கு செல்லும் நபர், தங்களுடைய ஆதார் தகவல்கள் மூலம் தாங்களே சரிபார்த்துக்கொள்ள அனுமதிக்கப்படுவார். பின்னர் அவருக்கு தடுப்பூசி செலுத்தப்படும்.

இந்த திட்டத்தில் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு எதிர்பாராமல் கொரோனா வைரஸ் பரவுவது பெருமளவு தடுக்கப்படும் என மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like