அரசு மருத்துவமனை நர்ஸ் அடித்து கொலை ! வீட்டில் இருந்த நபர் யார்?

 | 

திண்டுக்கல்லில் சுரேஷ் (44)- செல்வி தம்பதி வசித்து வந்தனர். இதில், சுரேஷ் கேட்டரிங் நடத்தி வருகிறார். செல்வி தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்தார். 

எனினும், சுரேஷ் மகனையும், மகளையும் அழைத்து கொண்டு திண்டுக்கல்லில் உள்ள வீட்டில் வசித்துவந்தார். செல்வி மட்டும் பாப்பம்மாள்புரத்தில் தனியாக வசித்து வந்தார். நேற்று மனைவி செல்வியை சுரேஷ் செல்போனில் தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது. நீண்ட நேரம் அழைத்தும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருப்பதை அறிந்து சந்தேகமடைந்தார்.

s

பின்னர், உறவினர்கள் சென்று பார்த்தபோது வீட்டின் பூஜை அறையில் முகம் மற்றும் தலையில் பலத்த காயங்களுடன் செல்வி இறந்து கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் ஆண்டிபட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

பின்னர் மாவட்ட எஸ்பி பிரவீன் உமேஷ் டோங்ரே மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதில், தலை மற்றும் முகத்தில் பலமாக தாக்கப்பட்டதால் செல்வி உயிரிழந்தது தெரிய வந்தது. அருகில் உள்ள வீடுகளில் வசிப்பவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

s

கொலை செய்யப்பட்ட செல்வியின் செல்போன் மாயமாகி விட்டது. அந்த செல்போனை கொலையாளியே எடுத்து சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. தற்போது, அந்த செல்போன் ‘சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டுள்ளது.

இந்த கொலை வழக்கில் துப்புத்துலக்க செல்போனை துருப்புச்சீட்டாக போலீசார் பயன்படுத்துகின்றனர். செல்வியின் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய நபர்கள் மற்றும் செல்வி பேசிய நபர்கள் குறித்த பட்டியலை போலீசார் சேகரித்துள்ளனர். அதனை அடிப்படையாக கொண்டு போலீஸ் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP