அரசு மருத்துவர்கள் கருப்பு பட்டை அணிந்து பணிபுரிய வேண்டும்.! - மருத்துவர் கூட்டமைப்பு

அரசு மருத்துவர்கள் கருப்பு பட்டை அணிந்து பணிபுரிய வேண்டும்.! - மருத்துவர் கூட்டமைப்பு

அரசு மருத்துவர்கள் கருப்பு பட்டை அணிந்து பணிபுரிய வேண்டும்.! - மருத்துவர் கூட்டமைப்பு
X

சென்னை தனியார் மருத்துவமனை ஒன்றில் நரம்பியல் மருத்துவராக பணியாற்றி வந்தவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். அவரது சடலத்தை அண்ணா நகர் வேலங்காடு பகுதியில் அடக்கம் செய்ய கொண்டு சென்ற போது அவரை அங்கு அடக்கம் செய்ய கூடாது என்று அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தடுத்துள்ளனர்.

மேலும் கற்களை வீசி அவர்கள் தாக்கியதில் ஆம்புலன்ஸ் வாகனம் சேதமடைந்தது.
 
இதையடுத்து கூடுதலாக போலீஸார் வரவழைக்கப்பட்டு அவரது உடல் வேறு இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவத்திற்கு பிறகு, உடல் அடக்கத்தை எதிர்த்தால் குண்டர் சட்டம் பாயும் என காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அதிரடியாக அறிவித்துள்ளார்.

மேலும் அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் இந்த செயலுக்கு வருத்தம் தெரிவித்தனர். 

இந்நிலையில், அரசு மருத்துவர் கூட்டமைப்பு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், ’அரசு மருத்துவர்கள் நாளைமுதல் கருப்பு பட்டை அணிந்து பணிபுரிய வேண்டும். பணியின்போது இறந்த மருத்துவர்களுக்கு இன்று இரவு 9 மணிக்கு குடும்பத்துடன் மெழுகு வர்த்து ஏந்தி அஞ்சலி செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.

newstm.in

Next Story
Share it