1. Home
  2. தமிழ்நாடு

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்..!

1

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான மாத சம்பள பில்லை ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை இணையதளம் (ஐஎப்எச்ஆர்எம்எஸ்) களஞ்சியம் 2.0 முகவரியில் அந்தந்த துறைகள் மூலமாக பட்டியல் தயாரித்து ஏற்றப்படும். 

2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாத சம்பளத்தை ஏற்றும்போது அந்த மாத சம்பளத்துடன் அகவலைப்படி நிலுவைத் தொகையும் சேர்த்து வழங்கியதனால் அதற்கான வருமான வரியை பிடித்தம் செய்தார்கள்.  அதேபோல நவம்பர் மாத சம்பளத்திலும் அக்டோபர் மாதத்தில் பிடித்தம் செய்த வருமான வரித்தொகை மீண்டும் பிடித்தம் செய்தனர். வருமான வரித்துறை யில் பிடித்தம் செய்யும் பணத்தை திரும்பப் பெறுவதற்கு ஆறு மாதம் காலம் தாமதம் ஏற்படும். இதனால் அரசு ஊழியர்கள்  மற்றும் ஆசிரியர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இதனையடுத்து டிசம்பர் மாதத்திற்கான சம்பள பட்டியலை தயாரிக்கும் அனைத்து துறை அலுவலரும் இணையதளத்தில் சம்பள பட்டியலை பதிவேற்றம் செய்த பின், சம்பளத்திற்குரிய வருமான வரியை மட்டுமே பிடித்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான டிசம்பர் மாத சம்பள பட்டியல் என்பது டிசம்பர் மாதம் 16 ஆம் தேதியிலிருந்து தயாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த முறை போன்று வருமான வரியை அதிக அளவில் பிடித்தம் செய்யாமல் அவரவர் சம்பளத்திற்கான வருமான வரியை மட்டும் பிடிக்கும் வகையில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சம்பளப் பிடித்தத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடி தற்போது நீங்கியுள்ளது என கூறப்பட்டு உள்ளது. 

அதாவது தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுடைய சம்பளத்தில், அந்த மாதத்திற்குரிய வரியை மட்டும் பிடித்தம் செய்யும் வகையில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது. இதனால் டிசம்பர் மாத சம்பளம் எந்த குளறுபடி இல்லாமல் வந்து சேரும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Trending News

Latest News

You May Like