இல்லத்தரசிகளுக்கு இனிய செய்தி: அறிவித்து, அமல்படுத்தியது அரசு..!

 | 
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மக்கள் வாழ்வாதாரத்தை இழந்த நிலையில், அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மக்களும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், பண்டிகை காலத்தை முன்னிட்டு சமையல் எண்ணெய் மீதான அடிப்படை சுங்க வரி மற்றும் வேளாண் செஸ் வரிகளை  பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு குறைத்துள்ளது. இந்த வரி குறைப்பு இன்று முதல் 2022ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை அமலில் இருக்கும் என கூறியுள்ளது.

கச்சா எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட பாமாயில், சோயாபீன், சூரியகாந்தி எண்ணெய் மீதான அடிப்படை இறக்குமதி வரிகள் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளதால் மக்கள் வாங்கும் எண்ணெய் விலை குறையும் என கூறப்படுகிறது. இது, இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP