குட் நியூஸ்! பி.எஃப். இழப்பீடு ரூ.7 லட்சமாக அதிகரிப்பு!

 | 

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி திட்டத்தில் மரண காப்பீடு சலுகைகள் உயர்த்தப்படுவதாக ஓய்வூதிய நிதி மேலாளர் அறிவித்துள்ளார்.

வருங்கால வைப்பு நிதி என்பது பணியாளர்கள் வாங்கும் மாதச்சம்பளத்தில் 12 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு பணியாற்றும் நிறுவனம்.

அதற்கு சமமான தொகையையும் சேர்த்து வருங்கல வைப்பு நிதி ஆணையத்தில் முதலீடு செய்யும். இதுவே வருங்கால வைப்பு நிதி. இதில் 8.33 சதவீதம் பென்சன் திட்டத்திற்கும், 3.7 சதவீதம் வருங்கால வைப்பு நிதியகவும், 0.50 சதவீதம் காப்பீட்டிற்கும் செலுத்தப்படும்.

.பி.எஃப். (EPFO) இல் உள்ள 50 மில்லியன் சந்தாதாரர்களில், 2 மில்லியனுக்கும் அதிகமானோர் .டி.எல்.  சந்தாதாரர்களாக உள்ளனர்.

.டி.எல்.  சந்தாதாரர்களுக்கு குறைந்த பட்சம் 2 லட்சம் ரூபாய், அதிகபட்சம் 6 லட்ச ரூபாயாக இருந்த மரண காப்பீடு தற்போது குறைந்த பட்சம்  2.5 லட்ச ரூபாயாகவும், அதிகபட்சம் 7 லட்ச ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் ஒரு .டி.எல். சந்தாதாரர் வேலையில் இருக்கும்போது இறந்துவிட்டால், சந்தாதாரரின் குடும்பத்திற்கு இந்த சலுகைகள் வழங்கப்படுகிறது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP