1. Home
  2. தமிழ்நாடு

நல்ல மனிதர்.. ரத்தன் டாடா மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்..!

1

ரத்தன் டாடா மும்பையில் பிரிட்ஸ் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று அவருக்கு தீவிர கண்காணிப்பு பிரிவான ஐசியூவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். ரத்தன் டாடாவின் மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் ரத்தன் டாடா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛ரத்தன் டாடா தொலைநோக்கு பார்வை கொண்ட ஒரு தொழிலதிபர். அதேவேளையில் இரக்க குணம் கொண்ட அசாதாரண மனிதர். இந்தியாவின் பழமைமிக்க நிறுவனத்துக்கு அவர் சிறந்த தலைமைத்துவத்தை வழங்கினார். அதேவேளையில் அவரது பங்களிப்பு என்பது போர்டு ரூமை தாண்டியதாக இருந்தது.

அவரது பணிவு, கருணை, நமது சமுகத்தை மேம்படுத்தும் வகையில் இருந்தது. ரத்தன் டாடாவின் தனித்துவமான பண்பு என்னவென்றால் பெரிய கனவுகளை கொண்டிருந்தார். கல்வி, சுகாதாரம், விலங்குகளின் நலன்களின் மீது அக்கறை கொண்டிருந்தார்.

நான் குஜராத் முதல்வராக இருந்தபோது ரத்தன் டாடாவை அடிக்கடி சந்திப்பேன். பல்வேறு விவகாரங்கள் பற்றி பேசி கருத்துகளை பகிர்ந்து கொண்டோம். அவருடைய விஷன் எப்போதும் செழுமையாகவே இருந்தது. நான் பிரதமரான பிறகும் கூட எங்கள் இருவருக்கும் இடையேயான தொடர்பு என்பது தொடர்ந்து வந்தது. அவரது மறைவு இப்போது எனக்கு வேதனையை தருகிறது. இந்த துக்கமான நேரத்தில் எனது எண்ணங்கள் எல்லாம் அவரது குடும்பத்தினர், நண்பர்களுடன் இருக்கிறது. ஓம் சாந்தி'' என வருத்தம் தெரிவித்துள்ளார்.


 

Trending News

Latest News

You May Like