1. Home
  2. வர்த்தகம்

கொரோனா காலத்திலும் விலை உச்சத்தில் தங்கம் விலை !!

கொரோனா காலத்திலும் விலை உச்சத்தில் தங்கம் விலை !!

சமையல் எரிவாயு, பெட்ரோல் என்று தினம் தினம் விலையேற்றத்தில் சிக்கித் திணறும் பொதுமக்கள் உயர உயர பறக்கும் தங்கத்தின் விலையையும் அதிர்ச்சியுடனேயே பார்த்து வருகின்றனர்.கொரோனா பரவல் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீதும், வெள்ளியின் மீதும் முதலீடு செய்கின்றனர். இதனால் சில்லறை விலையில் தங்கம் விலை ஒவ்வொரு நாளும் புது உச்சத்தை அடைகிறது.இனி தங்கம் வாங்குவது கனவில் மட்டுமே நிறைவேறும் என்று நடுத்தர மக்கள் கவலையில் கவலையில் ஆழ்ந்தனர்.

கடந்த வருடம் தங்கித்தின் விலை 43 ஆயிரத்தை நெருங்கியது மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியது அதே நிலைமை இந்த வருடமும் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர் .இந்த மாதம் தொடக்கத்திலிருந்து குறைந்து வந்த தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக ஏற தொடங்கியது.இன்றைய விலை ஏற்றதால் தங்கம் விலை 37 ஆயிரத்தை தாண்டியது.

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 264 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.37,120-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 33 ரூபாய் உயர்ந்து, ரூ.4,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 76,100 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 1,000 ரூபாய் உயர்ந்து ரூ.77,100-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.77.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Trending News

Latest News

You May Like