மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த தங்கம்..2 நாளில் சவரனுக்கு ₹1,200 உயர்வு..!

இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. பெரும்பாலும் தங்கம் விலை உயர்ந்தே காணப்படும். இதனை தொடர்ந்து கடந்த வாரம் தங்கம் விலை சவரனுக்கு 2,440 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.71,440-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், மாத தொடக்க நாளான நேற்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. கிராமுக்கு 105 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 9,020 ரூபாய்க்கும் சவரனுக்கு 840 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 72,160 ரூபாய்க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், தங்கத்தின் விலை இன்று(ஜூலை 2) சவரனுக்கு ₹360 அதிகரித்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹9,065-க்கும், 8 கிராம் கொண்ட சவரன் ₹72,520-க்கும் விற்பனையாகிறது. நேற்று(ஜூலை 1) சவரனுக்கு ₹840 அதிகரித்திருந்த நிலையில், 2-வது நாளாக ₹360 உயர்ந்து 2 நாள்களில் மட்டும் சவரனுக்கு ₹1,200 அதிகரித்துள்ளது.