1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்!! 36 ஆயிரத்திற்கு சரிந்த தங்கம் விலை!!

குட் நியூஸ்!! 36 ஆயிரத்திற்கு சரிந்த தங்கம் விலை!!


நம் முன்னோர்கள் முதல் குறிப்பாக நம் தாய்மார்கள் வரை, தான் சேமித்த ஒவ்வொரு காசையும் சிறிதளவாவது தங்கத்தை நகை ஆபரணங்களை வாங்கி விட வேண்டும் என்ற எண்ணத்தில் வாங்கினர். அந்த எண்ணம் இப்போதும் தொடர்கிறது.

இந்த மாத தொடக்கத்தில் இருந்து தங்கத்தின் விலை உச்சிக்கு சென்றது மக்களுக்கு ஒரு அதிர்ச்சியாகவே இருந்தது. இனி நடுத்தர மக்கள் தங்கம் வாங்குவது ஒரு எட்டா கனியாக மாறிவிடுமோ என்ற அச்சம் நிலவி வந்த வேலையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்து வருவது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நேற்று முன்தினம் ரூ.36,352க்கு விற்கப்பட்ட தங்கம் நேற்று ரூ.36,240 ஆக குறைந்தது. இதைத் தொடர்ந்து, இன்று மீண்டும் தங்கம் விலை குறைந்துள்ளது.

இந்நிலையில், தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.36,000-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து, ரூ.4,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 71,500 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 400 ரூபாய் அதிகரித்து ரூ.71,900-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.71.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Trending News

Latest News

You May Like