1. Home
  2. தமிழ்நாடு

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தங்கத்தேர் புறப்பாடு !

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தங்கத்தேர் புறப்பாடு !

வரும் 11–ம் தேதி தை அமாவாசை தினத்தை யொட்டி, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தங்கத்தேர் புறப்பாடு நடைபெற உள்ளது.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கானவர்களை கொரோனா வைரஸ் பலிவாங்கியது. இதனால், இந்தியாவில், கடந்த மார்ச் 25–ம் தேதியிலிருந்து கொரோனா பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. இதனால், கோயில்களில் பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய அரசு அனுமதிக்கவில்லை.

தற்போது கொரோனா பரவலை மத்திய, மாநில அரசுகள் கட்டுத்தி வரும் நிலையில் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அந்த வகையில், கடந்த ஜூன் 1–ம் தேதி முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அரசு அனுமதி வழங்கியது.

ஆனால், திருப்பரங்குன்றம் கோயிலில் மூலஸ்தானத்தில் சுவாமியின் திருக்கரத்தில் உள்ள வேலுக்கு பாலாபிஷேகம் உள்ளிட்டவைகளுக்கு கடந்தசில நாட்களுக்கு முன்னர்தான் அரசு அனுமதி அளித்தது. இந்நிலையில், கடந்த ஓராண்டாக தங்கத் தேரோட்டம் நடைபெறாத நிலையில், வரும் அமாவாசை தினம் அன்று திருவாச்சி மண்டபத்தில் தங்கத் தேரோட்டம் நடத்த திருக்கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

மேலும், வரும் மாசி மாத கார்த்திகை தினம் அன்று தங்கமயில் வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like