கொரானா எப்போ ஒழியும் என்பது , கடவுளுக்குத் தான் தெரியும் !! முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

கொரானா எப்போ ஒழியும் என்பது , கடவுளுக்குத் தான் தெரியும் !! முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

கொரானா எப்போ ஒழியும் என்பது , கடவுளுக்குத் தான் தெரியும் !! முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
X

சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை ஆய்வு செய்தார் முதல்வர் பழனிசாமி. பின்பு செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ; கொரோனா பரவலை தடுக்கும் முயற்சிக்கு அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஒத்துழைக்க வேண்டும்.

கொரோனா பரவலைத் தடுக்கவே பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது, மக்களை சிரமப்படுத்த அல்ல. கொரோனாவை தடுக்கவே. கொரானா எப்போ ஒழியும் என்பது கடவுளுக்குத்தான் தெரியும்.

இந்தியாவிலேயே அதிகமாக தமிழகத்தில் தான் இதுவரை 8 லட்சத்து 27 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. நாட்டிலேயே அதிகமாக தமிழகத்தில்தான் 83 பரிசோதனை மையங்கள் உள்ளன.

தற்போது நாள்தோறும் கூடுதலாக பரிசோதனையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 23,500 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தயவு கூர்ந்து கேட்டுக்கொள்கிறேன்.

Newstm.in

Next Story
Share it