காதலி பேசவில்லை !! காதலியை கத்தியால் குத்தி கொலை செய்த காதலன் !! தலைமறைவான நபர் கைது..

காதலி பேசவில்லை !! காதலியை கத்தியால் குத்தி கொலை செய்த காதலன் !! தலைமறைவான நபர் கைது..

காதலி பேசவில்லை !! காதலியை கத்தியால் குத்தி கொலை செய்த காதலன் !! தலைமறைவான நபர் கைது..
X

கோவை பேரூர் செட்டிபாளையம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஆறுமுக கவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகள் ஐஸ்வர்யா. 18 வயதான இந்த பெண்ணும், அதே பகுதியை சேர்ந்த ரித்திஸ் என்ற 24 வயது இளைஞரும் காதலித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், இவர்களது காதல் விவகாரம் வீட்டிற்கு தெரியவந்தது. இருவரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் திருமணத்திற்கு பெண்ணின் வீட்டார் சம்மதிக்கவில்லை. இந்த நிலையில், ஐஸ்வர்யாவை அவரது குடும்பத்தார் கண்டித்ததாக தெரிகிறது.

தொடர்ந்து, அவர் கடந்த சில நாட்களாக ரித்திசுடன் பேசுவதை தவிர்த்துவந்துள்ளார். இந்த நிலையில், ஐஸ்வர்யா கடந்த வெள்ளிக்கிழமை இரவு வீட்டின் இருந்த போது ரித்திஸ் அங்கு சென்று காதலியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

வாக்குவாதம் அதிகரிக்கவே தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஐஸ்வர்யாவை சரமாரியாக குத்தினார். ஐஸ்வர்யாவின் அலறல் சத்தத்தை கேட்ட அவரத தந்தை சக்திவேல் ஓடிச்சென்று ரித்திசை தடுக்க முயன்றார்.

அப்போது சக்திவேலுக்கும் கத்திக்குத்து விழுந்தது. சுதாரித்துக் கொண்ட ரித்திஸ் அங்கிருந்த ஓடி தலைமறைவாகி விட்டார். தொடர்ந்து தந்தை மகள் இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சூழலில் , கடந்த சனிக்கிழமை ஐஸ்வர்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து பேரூர் போலீசார் வழக்கு பதிவு தலைமறைவாக இருந்த ரித்திசை தேடி வந்தனர். தொடர்ந்து அவர் கேரளாவில் பதுங்கி இருப்பது தெரியவரவே அங்கு சென்ற போலீசார் ரித்திசை கைது செய்து கோவை அழைத்து வந்தனர். தற்போது பேருர் காவல் நிலையத்தில் வைத்து ரித்திசிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newstm.in

Next Story
Share it