ரத்தத்தை காவலர் மீது பூசிய பெண், கடுமையான வாக்குவாதம் - வைரல் வீடியோ

 | 

மேற்கு வங்க மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய பெண்ணை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால், அவர் தனது பழைய காயத்தை கடித்து இரத்தத்தை காவல் துறை அதிகாரி மீது பூசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண் ஒருவர் தனது ஆண் நண்பருடன் கொல்கத்தா பேலிகுஞ்ஜேவிலிருந்து சால்ட்லேக் பகுதிக்கு வந்து கொண்டிருந்தார். அந்த பெண்ணை நிறுத்திய காவல்துறையினர் எங்கே செல்கிறீர்கள் என்று கேட்டனர். அவர் மருந்து வாங்கச் செல்வதாக கூறினார். மருந்து சீட்டை கேட்டதற்கு, அந்த பெண் தரவில்லை. இதனால் அந்த பெண்ணுக்கு காவல்துறையினர் அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து ஆத்திரமடைந்த அப்பெண் காவல்துறையினருடன்  வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.


தனது பழைய காயத்தை கடித்து ரத்தம் வரவழைத்து, அதனை வெள்ளை சீருடையில் இருந்த போலீஸ் அதிகாரி மீது அந்தப் பெண் பூசினார். மேலும் தன்னை பிடித்து தள்ளியதாகவும், காயப்படுத்தியதாகவும் பொய்யான புகாரை கொடுப்பேன் எனவும் மிரட்டினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோவும் இணையத்தில் இப்பொழுது வைரலாகி வருகிறது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP