1. Home
  2. தமிழ்நாடு

வாகன நிறுத்துமிடத்தில் திருமணம்.. நேரலையில் கண்டு வாழ்த்திய உறவினர்கள்.!

வாகன நிறுத்துமிடத்தில் திருமணம்.. நேரலையில் கண்டு வாழ்த்திய உறவினர்கள்.!


ஊரடங்கு அமலில் இருப்பதால் அமெரிக்காவில் இளம் ஜோடிக்கு வாகன நிறுத்துமிடத்திலேயே திருமணம் நடந்த விசித்திரமான சம்பவம் நடைபெற்றது.

கொரோனா வைரசால் உலகிலேயே அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. 7லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 39ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக, அமெரிக்கா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் ஒரு ஜோடிக்கு வாகன நிறுத்துமிடத்திலேயே திருமணம் நடைபெற்றது.

கலிபோர்னியாவை சேர்ந்த அலிசன் மற்றும் செர்ஜியோ ஆகிய இருவருக்கும் ஹவாயில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் பயணக் கட்டுப்பாடு போடப்பட்டதால் அவர்களால் ஹவாய்க்கு செல்ல முடியவில்லை. இந்நிலையில் கலிபோர்னியாவிலேயே பதிவு திருமணம் செய்யமுடிவெடுத்தனர்.

அதன்படி, ஹாக்கி விளையாட்டு மைதானத்தின் வாகன நிறுத்த பகுதியில் தற்காலிகமாக பதிவு துறை அலுவலகம் செயல்படுகிறது. எனவே அங்கேயே இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஒருசிலர் அதனை தங்கள் செல்போன் மூலம் நேரலையாக ஒளிபரப்பினர். அதனை உறவினர்கள் செல்போன்களில் நேரலையாக கண்டு ரசித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இதேபோல் மேலும் பல ஜோடிகளுக்கு அங்கு திட்டமிட்டப்படியும், திருமண ஹால்க்கு செல்ல முடியாமல் சந்தர்ப்ப சூழலாலும் அங்கு திருமணம் நடைபெற்றது.

newstm.in 

Trending News

Latest News

You May Like