இதை தெரிஞ்சிக்கோங்க..! இன்ஸ்டா ரீல்ஸ் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி?
ஒரு இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்க்கு ரூ. 1 லட்சத்திற்கும் அதிகமான வியூஸ்கள் வந்தால் எவ்வளவு பணம் கிடைக்கும்? என்று தெரிந்தால் நீங்களே ஆச்சரியப்படுவீங்க. இந்தப் பதிவில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் எப்படி பணம் சம்பாதிப்பது?
முதலாவதாக உங்கள் வணிகம் அல்லது தயாரிப்பை ரீல்ஸ் உதவியுடன் விளம்பரப்படுத்தலாம். இதைப் பயன்படுத்தி நீங்கள் நல்ல வருமானம் ஈட்ட முடியும். அதேபோல நீங்கள் பதிவிடும் வீடியோவில் ஏதேனும் தயாரிப்பு குறித்த லிங்கை வழங்கலாம். யாரேனும் அந்த லிங்கைப் பயன்படுத்தி ஒரு இணையதளத்திலிருந்து பொருட்களை வாங்கினால். உங்களுக்கு கமிஷன் கிடைக்கும். பல கன்டென்ட் கிரியேட்டர்கள் வருமானத்தை ஈட்டுவதற்காக பிரபல பிராண்டுகளுடன் இணைந்து இதே யுக்தியை பயன்படுத்தி செயல்படுகின்றனர்.
இன்ஃப்ளூயன்சர்களை 4 வகைகளாகப் பிரிக்கலாம்.
20,000 முதல் 50,000 வரை பாலோவர்ஸ்கள் இருப்பவர்களை மைக்ரோ இன்ஃப்ளூயன்சர்கள் என்று அழைப்பார்கள். 60,000 முதல் 1,60,000 வரையிலான பாலோவர்ஸ்கள் இருப்பவர்களை மேக்ரோ இன்ஃப்ளூயன்ஸர்கள் என்று கூறுவார்கள். 3 லட்சம் முதல் 5 லட்சம் வரையிலான பாலோவர்ஸ்கள் இருப்பவர்களை மெகா இன்ஃப்ளூயன்ஸர்கள் என்று அழைப்பார்கள்.
அதேபோல 7 லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோவர்ஸ்கள் இருப்பவர்களை செலபிரிட்டி இன்ஃப்ளூயன்சர்கள் என்று கூறுவர். ஒரு அறிக்கையின் படி நானோ இன்ஃப்ளூயன்சர்கள் ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை சம்பாதிக்கின்றனர். அதேபோல மேக்ரோ இன்ஃப்ளூயன்ஸர்கள் ரூ. 60,000 முதல் 68,000 வரையிலும் சம்பாதிக்கின்றனர்.
இன்றைய சூழலில் பேஸ்புக்கிற்கு பிறகு மக்கள் பலரும் பயன்படுத்தும் தளமாக இன்ஸ்டாகிராம் மாறி இருக்கிறது, மசாலா பொருட்கள் விற்பனை, ஹேர் ஆயில் விற்பனை, சாரி விற்பனை என பலவற்றுக்காகவும் மக்கள் இன்ஸ்டாகிராமை பயன்படுத்துகின்றனர். ஒரு கடை அமைத்து இதன் மூலம் வருமானம் பெறுவதை விட உலகெங்கிலும் உள்ள மக்களை சென்றடைய இது போன்ற தளங்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. ஒருவர் தங்களுடைய பிராண்டை பிரமோட் செய்யும் போது அவர்களின் வாடிக்கையாளர் எண்ணிக்கை அடிப்படையில் வருமானம் பெற முடியும்.
ப்ரோமோஷன்: ஒரு வேலை ஒரு குறிப்பிட்ட பயனருக்கு பாலோவர்ஸ்கள் அதிகமாக இருந்தால் ஒரு பிராண்ட் அல்லது ப்ராடக்ட்டை ப்ரொமோட் செய்வதன் மூலமும் பணம் சம்பாதிக்கலாம்.