1. Home
  2. தமிழ்நாடு

ஜியோ , பேஸ்புக் நிறுவனம் இணைகிறதா !!

ஜியோ , பேஸ்புக் நிறுவனம் இணைகிறதா !!


இந்தியா முழுவதும் ஜியோ பெரும்பான்மையான வாடிக்கையாளர்களை கொண்ட நிறுவனம். இந்த நிறுவனத்தின் பங்குகள் சிலவற்றை பேஸ்புக் வாங்குவதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. இந்நிலையில் ஜியோவின் 9.99% பங்குகளை 5.7 பில்லியன் டாலர்களுக்கு பேஸ்புக் நிறுவனம் வாங்கியுள்ளது.

அதவாது இந்திய மதிப்பின்படி 43,574 கோடி ரூபாய்க்கு இந்த பங்குகள் வாங்கப்பட்டுள்ளன. இது குறித்து பேசியுள்ள பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுகர்பெர்க் இதன் மூலம் ஜியோ நிறுவனத்தின் செயல்பாடுகளோடு பேஸ்புக் நிறுவன சேவைகளையும் இணைத்து மக்களுக்கு எளிய முறையில் சில சேவைகள் கிடைக்க முயற்சிகள் மேற்கொள்ளும் திட்டம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் முதலீட்டின் அங்கமாக ஜியோ பிளாட்பார்ம்ஸ், ரிலையன்ஸ் ரீடெயில் மற்றும் வாட்ஸ் ஆப் போன்றவை வணிக ரீதியில் கூட்டணி அமைத்து இருக்கின்றன. இந்த கூட்டணியில் ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனத்தின் புதிய வணிக வியாபாரமான ஜியோமார்ட் தளத்தை வாட்ஸ்அப் கொண்டு ஊக்குவிக்க திட்டமிடப்பட்டுள்ளன என தெரிகிறது.

Newstm.in

Trending News

Latest News

You May Like