இளைஞர்களே உஷார்...! பெண்களிடம் சில்மிஷம் செய்தால் கடும் நடவடிக்கை பாயும் !!

குடித்து கும்மாளமடிக்கும் பெண்களுக்கும் கடும் தண்டனைகள் விதிக்கப்படும் என்கிற முடிவில் காவல் துறையினர் இருக்கிறார்களாம். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, பெண்களிடம் சில்மிஷம் செய்பவர்களை சி.சி.டி.வி. கேமரா மூலம் கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.போதையில் வாகனம் ஓட்டுபவர்களின் லைசென்ஸ் ரத்து செய்யப்படும்.இளைஞர்களே உஷார்...!
 | 

இளைஞர்களே உஷார்...! பெண்களிடம் சில்மிஷம் செய்தால் கடும் நடவடிக்கை பாயும் !!

புத்தாண்டை வரவேற்க உலகமே பரபரப்பாக தயாராகி வரும் நிலையில், சென்னையிலும் புத்தாண்டை வரவேற்க பெரிய பெரிய ஸ்டார் ஹோட்டல்களும், சொகுசு பங்களாக்களும், பப்களும் தயாராகி வருகின்றன.  

                                          இளைஞர்களே உஷார்...! பெண்களிடம் சில்மிஷம் செய்தால் கடும் நடவடிக்கை பாயும் !!

 

புத்தாண்டை வரவேற்கும் விதமாக டிசம்பர் 31ந் தேதி இரவு இளைஞர்களும், கல்லூரி மாணவிகளும் செய்கிற அட்டகாசங்களைக் கண்காணிப்பது ஒவ்வொரு வருஷ இறுதியிலும் போலீசாருக்கு பெரும் தலைவலியாகவே இருந்து வருகிறது. குறிப்பாக ஆயிரக்கணக்கில் மக்கள் கூடும் சென்னை மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, எலியட்ஸ் கடற்கரை போன்ற பகுதிகளிலும், கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலை, அண்ணாசாலை உள்ளிட்ட முக்கிய இடங்களிலும் நிரை போதையில் காதலர்களும், இளைஞர்களும் டூ வீலரிலும், காரிலும் செய்கிற சேட்டைகளைச் சொல்லி  மாளாது என்கிறார் காவல் துறை நண்பர் ஒருவர். 

                                                  இளைஞர்களே உஷார்...! பெண்களிடம் சில்மிஷம் செய்தால் கடும் நடவடிக்கை பாயும் !!

 

.நட்சத்திர ஓட்டல்களில் அழகிகளின் நடனங்கள் உள்ளிட்ட ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் என்று விடிய விடிய பார்ட்டி களை கட்டும். இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்த பார்டிகளின் போது இளைஞர்கள் உற்சாக வெள்ளத்தில் பைக் ரேஸிலும், போதையில் வரம்பு மீறுவார்கள். அவர்களுக்கு கொஞ்சமும் சளைத்தவர்கள் கிடையாது என்கிற ரீதியில் இளம் பெண்களும் இப்படி வரம்பு மீறுவது உண்டு என்கிறார் அந்த காவல்துறை அதிகாரி. புத்தாண்டு குதூகலமும், கொண்டாட்டமும் மகிழ்ச்சியை தருவதாக இருக்க வேண்டுமே தவிர, விபரீதங்களுக்கு காரணமாக அமைந்து விடக்கூடாது. உயிர் பலி ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் போலீசார் அதிக கவனமாக உள்ளனர். 

                                                     இளைஞர்களே உஷார்...! பெண்களிடம் சில்மிஷம் செய்தால் கடும் நடவடிக்கை பாயும் !!

 

பாதுகாப்பு ஏற்பாடு:-

  • புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, பெண்களிடம் சில்மி‌ஷம் செய்பவர்களை சி.சி.டி.வி. கேமரா மூலம் கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • இந்த முறை இப்படி குடித்து கும்மாளமடிக்கும் பெண்களுக்கும் கடும் தண்டனைகள் விதிக்கப்படும் என்கிற முடிவில் காவல் துறையினர் இருக்கிறார்களாம். 
  • போதையில் வாகனம் ஓட்டுபவர்களின் லைசென்ஸ் ரத்து செய்யப்படுவதுடன், கடும் அபராதம்
  • மின்னல் வேகத்தில் செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்த சென்னையில் மட்டும் 500க்கும் அதிகமான இடங்களில் வாகன தடுப்புகள்
  • மெரினா உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.
  • புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்
  • சென்னையில் உள்ள  முக்கிய கோயில்கள் மற்றும் வழிபாட்டுதளங்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
  • கடற்கரை பகுதிகளில் மக்கள் கூட்டத்தை சமாளிக்க மணலில் செல்லக்கூடிய வாகனங்கள் பயன்படுத்தப்படும்.
  • அனைத்து சாலைகளிலும் மக்கள் கூடும் இடங்களிலும் கண்காணிப்பு கேமிரா மூலம் தீவிரமாக கண்காணிக்கப்படும் 

மதுப்போதையில் இருசக்கர வாகத்தை இயக்குவது, இருசக்கர வாகங்களில் சாகசம் செய்வது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவோர் கைது செய்யப்படுவர். அவர்களது இருசக்கர வாகனம்  பறிமுதல் செய்யப்படும்  எனவும் காவவ்துறை அதிகாரிகள் செய்தியாளர்களிடம் கூறினர்.

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP