மயிலுக்காக உயிரைப் பணயம் வைத்த இளைஞர்! பதை பதைக்கும் வீடியோ!

கிணற்றில் விழுந்த மயில் ஒன்றை இளைஞர் ஒருவர் தன் உயிரை பணயம் வைத்து துணிச்சலாக காப்பாற்றிய சம்பவம் தமிழகத்தில் நடந்தேறியுள்ளது. மயிலை காப்பாற்றும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
 | 

30 அடி ஆழம் கொண்ட கிணறு ஒன்றில் மயில் தவறுதலாக விழுந்து விட்டது. மயில் கிணற்றில் விழுந்ததை அப்பகுதியே வந்த ஒருவர் பார்த்து, மற்றவர்களிடம் கூறினார். உடனே இளைஞர் மயிலை காப்பாற்ற தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். 

அப்போது, கிணற்றில் பாம்பு ஒன்று இருந்ததை கண்ட, அக்குழுவினர், பாம்பால் மயிலின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடும் என்று, எண்ணி படிக்கட்டு இல்லாத அந்த கிணற்றில், குழுவில் உள்ள இளைஞரை கயிறு கட்டி விரைவாக கிணற்றுக்குள் இறக்கினர். கிணற்றில் உள்ளே சென்ற அவர், மயிலை பத்திரமாக வெளியே கொண்டு வந்தார். இதையடுத்து, இளைஞர் குழுவினர் பக்கத்தில் உள்ள வயல்வெளியில் மயிலை பறக்கவிட்டனர்.

மயில் காப்பற்றப்பட்டபோது, அங்குள்ள ஒருவர் அதனை தனது செல்போனில் வீடியோ எடுத்து, இணையத்தி பதிவிட்டார். இதையடுத்து, அந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, அக்குழுவினருக்கு பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP