Logo

அன்லிமிடெட் சேவைக்கு ஆப்பு! ஜியோ அதிரடி!

இண்டர்நெட், போன் கால்கள், எஸ்.எம்.எஸ் என்று அனைத்தையும் இலவசமாக அள்ளி வழங்கி, வாடிக்கையாளர்களை தன் வசப்படுத்திய ஜியோ நிறுவனம் தொலைத்தொடர்பு துறையில் மிக பெரிய அளவிலான மாற்றத்தை ஏற்படுத்தியது.
 | 

அன்லிமிடெட் சேவைக்கு ஆப்பு! ஜியோ அதிரடி!

இண்டர்நெட், போன் கால்கள், எஸ்.எம்.எஸ் என்று அனைத்தையும் இலவசமாக அள்ளி வழங்கி, வாடிக்கையாளர்களை தன் வசப்படுத்திய ஜியோ நிறுவனம் தொலைத்தொடர்பு துறையில் மிக பெரிய அளவிலான மாற்றத்தை ஏற்படுத்தியது. இதனால் பல முன்னணி நிறுவனங்கள் திண்டாடியது பழைய கதை. பலவருடமாக ஆதிக்கம் செலுத்தி வந்த பல்வேறு நிறுவனங்கள் ஜியோவின் வளர்ச்சியால் ஓரங்கட்டப்பட்டும், சில நிறுவனங்கள் இழுத்து மூடப்பட வேண்டிய  நிலைக்கும் வந்தது. மக்களுக்கு குறைந்த செலவில் அதிக இன்டர்நெட்டை வழங்கி வந்த  ஜியோவை அடுத்து அனைத்து நிறுவனங்களும் கட்டணத்தொகையை குறைத்தது.

இந்நிலையில், தங்கள் அனைத்து சேவைகளின் கட்டணங்களை உயர்த்துவதாக ஏர்டெல் மற்றும் வோடாஃபோன் நிறுவனங்கள் அறிவித்தன. அதேபோல தாங்களும் கட்டணங்களை உயர்த்துவதாக ஜியோவும் அறிவித்தது.
ஏர்டெல், டேட்டா மற்றும் கால் செய்யும் அன்லிமிடெட் திட்டத்தில் 28 நாட்களுக்கான கட்டணத்தை 129 ரூபாயிலிருந்து 148 ரூபாயாகவும், ஓர் வருட திட்டம் 1699 ரூபாயிலிருந்து 2398 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து வோடஃபோன் நிறுவனம் 28 நாட்களுக்கான கட்டணத்தை 179 ரூபாயிலிருந்து 299 ரூபாயாகவும், ஒருவருட கட்டணத்தை 1699 ரூபாயிலிருந்து 2399 ரூபாயாகவும் உயர்த்தியுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை வழங்கி வந்த ஜியோ நிறுவனமும் 40 விழுக்காடு வரை கட்டணங்கள் உயர்த்தப்படும் என்று  அறிவித்துள்ளது. இண்டர்நெட் வசதிகளை தாராளமாக உபயோகப்படுத்தி வந்த பொதுமக்கள் இந்த திடீர் அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP