விராலிமலை: பொதுமக்கள் காலிக் குடங்களுடன் மறியல்!

விராலிமலை அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 | 

விராலிமலை: பொதுமக்கள் காலிக் குடங்களுடன் மறியல்!

விராலிமலை அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டது. 

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள ராஜாளிபட்டி, நம்பம்பட்டி ஆகிய ஊராட்சிகளில உள்ள ராஜாளிபட்டி, பாட்னாபட்டி, குட்டியபட்டி, நம்பம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு காவிரி குடிநீர் மற்றும் ஆழ்குழாய் கிணறுகள் மூலமாகவும் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. தற்போது மழையின்றி கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதால் ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் காவிரி குடிநீரை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த ஓரு மாதமாக இபபகுதிக்கு முறையான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து விராலிமலை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் குடிநீர் வழங்க அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லைஎன்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் இன்று காலி குடங்களுடன் ராஜாளிபட்டியில் மணப்பாறை – புதுக்கோட்டை சாலையில் அமர்ந்து சாலை மறியல் பேராட்டத்தில் ஈடுபட்டனர்.  தகவலறிந்து அதிகாரிகள் அவ்விடத்திற்கு வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தொடர்ந்து, உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 

பொதுமக்களின் போராட்டம் காரணமாக மணப்பாறை – புதுக்கோட்டை சாலையில் அரை மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP