கஜா புயல் நிவாரண நிதியாக விஜயகாந்த் ரூ. 1 கோடி அறிவிப்பு

கஜா புயலின் கோரத்தாண்டவத்தால் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ள டெல்டா மாவட்டங்களுக்கு பலரும் நிவாரண நிதி அறிவித்து வரும் நிலையில் ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள்அனுப்பப்படும் என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
 | 

கஜா புயல் நிவாரண நிதியாக விஜயகாந்த் ரூ. 1 கோடி அறிவிப்பு

கஜா புயலின் கோரத்தாண்டவத்தால் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ள டெல்டா மாவட்டங்களுக்கு பலரும் நிவாரண நிதி அறிவித்து வரும் நிலையில் ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள்அனுப்பப்படும் என்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 

கடந்த 16ம் தேதி டெல்டா மாவட்டங்களில் கஜா புயல் தாக்கியது. இதனால் அந்த பகுதி  மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படைந்துள்ளது. இந்நிலையில் தமிழக அரசு சார்பில் நிவாரண பணிகள் நடந்து வருகின்றனர். எதிர்கட்சியான தி.மு.க கஜா நிவாரண நிதியாக ரூ.1 கோடியும், அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்களின் ஒரு மாத சம்பளத்தை தருவதாக அறிவித்துள்ளது. 

மேலும் பல திரையுலகினரும் நிதி அறிவித்துள்ளனர். இந்நிலையில் தே.மு.தி.க சார்பில் ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வழங்கப்படும் என்று விஜயகாந்த் அறிவித்துள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP