பா.ஜ.க கேட்க பயப்படும் இரண்டு வார்த்தைகள் 'இந்து, ராம்' : ஸ்டாலின் அதிரடி!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகம் வந்துள்ளதையடுத்து, நாகர்கோவில் ஸ்காட் கல்லூரி திமுக- காங்கிரஸ் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ராகுலை வரவேற்று பேசினார்.
 | 

பா.ஜ.க கேட்க பயப்படும் இரண்டு வார்த்தைகள் 'இந்து, ராம்' : ஸ்டாலின் அதிரடி!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகம் வந்துள்ளதையடுத்து, நாகர்கோவில் ஸ்காட் கல்லூரியில் திமுக- காங்கிரஸ் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ராகுலை வரவேற்று பேசினார். 

அப்போது அவர், "ரபேல் ஆவணங்கள் வெளியிட்டதற்காக இந்து என்.ராமிற்கு மிரட்டல்கள் வருகின்றன. அவரை மிரட்டி, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால், இங்கிருக்கும் அனைத்து கட்சிகளும் இந்து என்.ராமுக்கு ஆதரவாக துணை நிற்போம். 

'இந்து, ராம்' என்ற இந்த இரண்டு வார்த்தையை வைத்து ஆட்சியை பிடிக்கலாம் என்று நினைத்தீர்கள். ஆனால், நீங்கள் தற்போது அந்த இரண்டு வார்த்தைகளுக்கு தான் பயப்படுகிறீர்கள். 

வடக்கே வல்லபாய் படேல் மற்றும் தெற்கே காமராஜரை வைத்து பாஜகவினர் ஓட்டு கேட்கிறார்கள். அவர்களை பார்த்தாலே பரிதாபமாக இருக்கிறது. மோடியின் பினாமி ஆட்சியான அதிமுக ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது. முதல்வரை பிரதமர் மிரட்டுகிறார். கொத்தடிமை ஆட்சி தான் இங்கு நடைபெற்று கொண்டிருக்கிறது. 

பொள்ளாச்சியில் 200க்கு மேற்பட்ட பெண்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். ஆனால், ஆளும் கட்சியினர் மீடியாக்களை மிரட்டுகின்றனர். தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது

வரப்போவது தேர்தல் இல்லை; அது ஜனநாயக போர்; ஆட்சி மாற்றம் இல்லை; அதிகார மாற்றம். எனவே மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். வரும் தேர்தல்களில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று காங்கிரஸ் தலைவருக்கு நான் உறுதி அளிக்கிறேன்" என்றார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP