போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்!

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இன்று மாலைக்குள் ஊதியம் வழங்கப்படும் என்ற அரசின் வாக்குறுதியை ஏற்று போக்குவரத்துத்துறை பணியாளர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
 | 

போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்!

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இன்று மாலைக்குள் ஊதியம் வழங்கப்படும் என்ற அரசின் வாக்குறுதியை ஏற்று போக்குவரத்துத்துறை பணியாளர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றனர். 

சென்னையில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் இன்று திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், பெரும்பாலான அரசுப் பேருந்துகள் இயங்கவில்லை. இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். 

இதுகுறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசும்போது, "நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு ஊதியம் வங்கிக்கணக்கில் செலுத்த முடியவில்லை. இன்று மாலைக்குள் ஊதியம் வழங்கப்படும். அதேபோன்று போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு ஊதியக் குறைப்பு எதுவும் இல்லை. வதந்திகளை நம்ப வேண்டாம்" என்று கூறினார்.

இதையடுத்து, போக்குவரத்து தொழிலாளர்களுடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு, அவர்கள் தங்களது போராட்டத்தினை வாபஸ் பெறுவதாக கூறியுள்ளனர். 

இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் கணேஷ், "போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதியம் கடந்த சனிக்கிழமையை வந்திருக்க வேண்டும். ஆனால், சிலருக்கு இன்று காலை தான் வங்கிக்கணக்கில் பாதி தொகை மட்டுமே வந்துள்ளது. பிடித்தம் போக வரும் தொகையில் 62% மட்டுமே வந்துள்ளது. மேலும் பலருக்கு இன்னும் ஊதியம் கிடைக்கவில்லை. எனவே தான் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது அரசு வாக்குறுதி அளித்துள்ளதால் அதனை ஏற்று அனைத்து தொழிலாளர்களும் உடனடியாக பணிக்குத் திரும்புகிறார்கள்" என்று கூறினார். 

newstm.in

சென்னையில் முன்னறிவிப்பின்றி திடீர் 'பஸ் ஸ்டிரைக்'; மக்கள் அவதி!

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP