தஞ்சை, விழுப்புரம், விருதுநகர் ஆட்சியர்கள், மாநில தேர்தல் ஆணைய செயலாளர் இடமாற்றம்

தஞ்சை, விழுப்புரம், விருதுநகர் ஆட்சியர்கள் மற்றும் மாநில தேர்தல் ஆணைய செயலாளர் ஆகியோரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
 | 

தஞ்சை மாவட்ட ஆட்சியராக இருந்த அண்ணாதுரை விழுப்புரம் மாவட்ட ஆட்சியாராகவும், சென்னை பெருநகர துணை ஆணையர் கோவிந்த ராவ் தஞ்சை மாவட்ட ஆட்சியராகவும் மாற்றப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்ட ஆட்சியராக இருந்த சிவஞானம் சுகாதாரத்துறை இணைச் செயலாராக நியமனம் செய்யப்பட்டு, குடிமை பொருள் வழங்கல்துறை ஆணையர் கண்ணன், விருதுநகர் மாவட்ட ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

மாநில தேர்தல் ஆணைய செயலாளர் எஸ்.பழனிசாமி டவுன் பஞ்சாயத்து இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டு, விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக உள்ள சுப்ரமணியன் மாநில தேர்தல் ஆணைய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வேளாண்துறை செயலாளர் முனியநாதன் ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையராகவும், ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் முரளிதரன் தமிழ்நாடு சிமெண்ட்ஸ் மேலான் இயக்குநராகவும், கலை, கலாச்சாரத்துறை ஆணையராக இருந்து சிஜி தாமஸ் பள்ளிக்கல்வித்துறை ஆணையராகவும், மதுரை முன்னாள் ஆட்சியர் ராஜசேகர் மருத்துவ பணியாளர் தேர்வு வாரிய தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP