அத்தி வரதர் தரிசனத்திற்கு இன்றே கடைசி நாள்!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் அத்தி வரதர் வைபவ விழா இன்றுடன் நிறைவடைகிறது. இதனால் வழக்கத்தை விட இன்று மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 | 

அத்தி வரதர் தரிசனத்திற்கு இன்றே கடைசி நாள்!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் அத்தி வரதர் வைபவ விழா இன்றுடன் நிறைவடைகிறது. இதனால் வழக்கத்தை விட இன்று மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் அத்தி வரதர் வைபவ விழா 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் நிகழ்வாகும். 40 ஆண்டுகளாக திருக்குளத்தில் இருக்கும் அத்தி வரதரை வெளியே எடுத்து தொடர்ந்து 48 நாட்கள் சிறப்பு பூஜைகள் செய்யப்படுவதுடன் இந்நாட்களில் மக்களுக்கு அருள்பாலிக்கிறார்.

கடந்த ஜூலை 1ம் தேதி தொடங்கிய இந்த வைபவம் இன்றுடன் நிறைவடைகிறது. ஜூலை 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை சயன கோலத்தில் காட்சியளித்த அத்தி வரதர் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் நின்றக் கோலத்தில் காட்சியளிக்கிறார். இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். வைபவம் இன்று நிறைவடைவதை அடுத்து கூட்டம் அதிகரித்துக் காணப்படும் என்றே கருதப்படுகிறது.

இதையடுத்து, கோவில் வளாகத்தை சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டுள்ளது. 

நாளைய தினம் அத்தி வரதருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மீண்டும் அவரது சிலை திருக்குளத்தில் வைக்கப்படுகிறது. மேலும், இன்றைய தினம் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் விஐபி, விவிஐபி பாஸ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP