என்னாச்சு ஸ்டாலினுக்கு? உளறி கொட்டும் மர்மம்!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுகவில் சரியான தலைமை இல்லை என மக்கள் முறுமுறுத்து வந்த காலம் மாறி, தற்போது திமுகவில் கருணாநிதி மறைவுக்கு பின் கட்சியின் தலைமை சரியாக உள்ளதா? என கட்சியினருக்குள்ளேயே விவாதம் எழும் சூழல் உருவாகியுள்ளது.
 | 

என்னாச்சு ஸ்டாலினுக்கு? உளறி கொட்டும் மர்மம்!

தமிழக அரசியலில், ஜெயலலிதா, கருணாநிதி  என இரு பெரும் ஆளுமைகளின் மறைவுக்குப் பின் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்பதை எவராலுமே மறுக்க முடியாது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுகவில் சரியான தலைமை இல்லை என மக்கள் முணுமுணுத்து வந்த காலம் மாறி, தற்போது திமுகவில் கருணாநிதி மறைவுக்கு பின் கட்சியின் தலைமை சரியாக உள்ளதா? என கட்சியினருக்குள்ளேயே விவாதம் எழும் சூழல் உருவாகியுள்ளது. 

வழக்கமாக ஆளும் கட்சியை எதிர்கட்சியினர் குறை சொல்வதும், விமர்சிப்பதும் உண்டு. ஆனால் தற்போது உள்ள சூழலில் ஆளும் கட்சி எதிர்க்கட்சி தலைவரை விமர்சிக்கும் சூழல் உருவாகியுள்ளது. பஞ்சமி நிலம் விவகாரத்தில் சிக்கிய ஸ்டாலினை ஆளும் கட்சியினர் ஒரு வழியாக்கிவிட்ட நிலையில், இதுவரை ஸ்டாலின் ஆளும் கட்சியினருக்கு தக்கப்பதிலடி கொடுக்கும் வகையில் எதுவும் பெரிதாக பேசவில்லை. ஆனால், கருணாநிதி இருந்த நாட்களில் திமுக மீது எழும் அனைத்து புகார்களையும்  வார்த்தை ஜாலத்தாலும், சாதூரியத்தாலும் ஒன்றும் இல்லாமல் செய்து விடுவார். அதுபோன்ற பக்குவம் ஸ்டாலினுக்கு இல்லை என்றே சொல்லப்படுகிறது. 

முரசொலி நில விவகாரம், மிசா வழக்கில் கைதாகி சிறைச் சென்றது என்று எதிர்  கட்சியினர் தொடுக்கும் வார்த்தைப் போர்களினால்  தான் ஸ்டாலினுக்கு பிரச்சனை என்று பார்த்தால், அதைவிட பெரிய பிரச்சனை அவரிடமே உள்ளது. சமீபத்தில் புதுக்கோட்டையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஸ்டாலின், பெண்ணின் மாமனார் பெயரை மணமகன் என அழைத்தது அங்கிருந்தவர்களை திடுகிடவைத்தது. சில நொடிகளில் தான் உளறியதை உணர்ந்த ஸ்டாலின், மணமகன் பெயரை கூறி எப்படியோ சமாளித்து விட்டார்.

அதேபோல், பேட்டி ஒன்றில் "முதலில் கலவரத்தை நடத்தனும்" என உளறிய ஸ்டாலின் அடுத்த கணமே கலவரத்தை நிறுத்த வேண்டும் என கூறி சமாளித்தார். இதுபோன்று சமீப நாட்களாய் பல இடங்களில் தொடர்ந்து அவர் உளறிக் கொட்டுவதை அதிர்ச்சியோடு பார்க்கிறார்கள் கழக உடன்பிறப்புகள்.  சமூக வலைதளங்களிலோ தொடர்ந்து மீம்ஸ் கிரியேட்டர்களின் கைவண்ணத்தில் தினமும் விதவிதமாக வலம் வருகிறார் ஸ்டாலின்.

வயோதிகம், உடல் நிலை ஒத்துழைக்காதது என்று பல்வேறு காரணங்களை ஸ்டாலின் ஆதரவாளர்கள் இதற்கு காரணங்களாக முன்வைத்தாலும், ஸ்டாலின் சொல்லும் குட்டிக் கதைகளையோ, பேப்பரைப் பார்த்து அறிக்கையை தப்பும், தவறுமாக வாசிக்கும் வழக்கத்தையோ, பழமொழி சொல்லி முடிக்கும் ஸ்டைலையோ பொதுமக்கள் அவ்வளவாக ரசிக்கவில்லை என்றே பரவலான கருத்து பரவி வருகிறது.

பலமான எதிர்கட்சியாக செயல்பட வேண்டிய திமுக இப்போது தடுமாறி வருகிறது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலங்களிலேயே கட்சியைக் கட்டுக்கோப்போடு காப்பாற்றி வந்தார் கலைஞர். ஆனால் எடப்பாடி காலத்திலேயே தடுமாறி வருகிறார் ஸ்டாலின். கட்சிக்குள் பல மூத்தவர்கள் இருக்கும் போது உதயநிதிக்கு கட்சியில் பதவி, இடைத்தேர்தலில் முழுக்கவே உதயநிதியின் வியூகப்படி செயல்பட்டு தோல்வியைத் தழுவியது போன்றவைகள் எல்லாம், ‘சிறுபிள்ளை வெள்ளாமை வீடு வந்து சேராது’ என்று தலைவருக்கு யாராவது சொல்லுங்கப்பா? என்று கழக உடன்பிறப்புகளையே முணுமுணுக்க வைத்துள்ளது.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP