தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 | 

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தென்மேற்கு பருவமழை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம், நீலகிரி, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது எனவும், கன்னியாகுமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை, மதுரை, பெரம்பலூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பநிலை இயல்பை விட 2இல் இருந்து 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP